சுடச்சுட

    

    அரூரில் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
     அரூர் வட்ட அன்னை தெரசா பேரவை சார்பில், சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் மற்றும் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது.
     விழாவில் சுவாமி விவேகானந்தரின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, விவேகானந்தரின் பொன்மொழிகள் வாசிக்கப்பட்டன.
     இதையடுத்து, அன்னை தெரசா பேரவை சார்பில் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில், அன்னை தெரசா பேரவையின் மாநில செயலர் தேசம் சுகுமார், சுவாமி விவேகானந்தர் சேவா சங்க ஒருங்கிணைப்பாளர் செல்லப்பன், அன்னை தெரசா தையல்பயிற்சி மைய இயக்குநர் மு.பிரேம்குமார், அரூர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.எஸ்.குமரேசன், பேரவை மாவட்ட பொதுச்செயலர் தீப்பொறி செல்வம்,
     தையல் பயிற்சி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai