Enable Javscript for better performance
பொங்கல் விழா கோலாகலம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவையொட்டி, தருமபுரியில் பல்வேறு தரப்பினரும் வியாழக்கிழமையே கொண்டாடி மகிழ்ந்தனர்.
     தருமபுரி மாவட்ட திமுக சார்பில், கலைஞர் அறிவாலயத்தில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலர் தடங்கம் பெ.சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
     பச்சமுத்து மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு, கல்லூரியின் தலைவர் ப.பாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியரின் மனைவி கவிதா விவேகானந்தன் குத்துவிளக்கேற்றித் தொடக்கி வைத்தார். மாணவியருக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரி இயக்குநர் சங்கீத் உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
     தருமபுரி அரசுக் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாணவ, மாணவியர் திரளாகப் பங்கேற்றனர். கல்லூரி வளாகத்தில் பொங்கல் வைக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
     அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், எபிரான் தொழில்பயிற்சி மையத்தில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. இனிப்புப் பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
     முன்னதாக கோலப் போட்டி உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன. வெற்றிபெற்ற மாணவியருக்கு மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலர் எஸ்.கிரைஸாமேரி உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai