Enable Javscript for better performance
309 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 309 மாணவர்களுக்கு ரூ.12.45 லட்சம் மதிப்புள்ள விலையில்லா மிதிவண்டிகளை மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வியாழக்கிழமை வழங்கினார்.
     அப்போது அவர் பேசியது: தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டில் மட்டும் 14,718 மாணவ, மாணவியருக்கு ரூ.5.69 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 8,67,847 மாணவ, மாணவியருக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுகள், பேருந்து பயண அட்டை, வரைபடங்கள், குடும்ப நிதி, பை, வண்ணப் பென்சில்கள், கிரையான்ஸ், சீருடைகள் மற்றும் காலணிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
     நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, கோட்டாட்சியர் ராமமூர்த்தி, பாலக்கோடு சர்க்கரை ஆலைத் தலைவர் கே.வி.அரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai