சுடச்சுட

    

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே டிராக்டரில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
     பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி மகன் வரதராஜி (52). இவர், சாமியாபுரம் கூட்டுச் சாலையில் உள்ள ஒரு தனியார் கிழங்கு அரைவை ஆலையில் தொழிலாளியாக பணிபுரிந்தார். கிழங்கு அரைவை ஆலை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரின் மேல்பகுதியில் இருந்து தொழிலாளி தவறி கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தொழிலாளியின் சாவில் மர்மம் இருப்பதாக வரதராஜியின் மனைவி செல்வி அளித்த புகாரின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai