சுடச்சுட

  

  தருமபுரி மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட, கூடுதலாக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தெரிவித்தார்.
   இதுகுறித்து ஆட்சியர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: தருமபுரி மாவட்டத்தில், திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைக் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட அளவில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
   இக்குழு உறுப்பினர்கள், மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் ரகசியமாக கண்காணிப்பர். அதில், கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண்களில் 1077, 8903891077 (கட்செவி அஞ்சல்), 18004251071, 18004257016 மற்றும் d‌e‌oc.‌d‌p‌i​@‌g‌m​a‌i‌l.c‌o‌m என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai