சுடச்சுட

  

  தருமபுரி அருகே இண்டூரில் வெள்ளிக்கிழமை "அம்மா' திட்ட முகாம் நடைபெற்றது.
   முகாமில் மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தலைமை வகித்துப் பேசியது: தருமபுரி மாவட்டத்தில் 470 கிராமங்களில் "அம்மா' திட்ட முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வாரந்தோறும், வட்டங்கள் வாரியாக கிராமங்களைத் தேர்வு செய்து முகாம்கள் நடத்தப்படுகின்றன.
   இதில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடித் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 46 கிராமங்களில் 100 சதம் தனிநபர் கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
   பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான ஜாதி, வருவாய், இருப்பிடச் சான்றிதழ்கள் பெற அந்தந்த பகுதிகளில் உள்ள கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களை தொடர்பு கொள்ளலாம் என்றார்.
   முகாமில், 47 பேருக்கு, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்து வழங்கப்பட்டது. நல்லம்பள்ளி வட்டாட்சியர் ராஜசேகர், வட்ட வழங்கல் அலுவலர் ராஜராஜன், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai