Enable Javscript for better performance
கார் மோதியதில் கல்லூரிப் பேராசிரியர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    அரூர் அருகே கார் மோதியதில் காயமடைந்த கல்லூரிப் பேராசிரியர் ராமமூர்த்தி (43) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
     அரூர் வட்டம், எஸ்.பட்டியைச் சேர்ந்த ராமசாமி மகன் ராமூர்த்தி (43). இவர், அரூர் அருகேயுள்ள ஒரு தனியார் கலைக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார். இந்த நிலையில், கடந்த 12-ஆம் தேதி அரூர்-ஊத்தங்கரை சாலையில், மோப்பிரிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் நின்றிருந்தாராம்.
     அப்போது அந்த வழியாக ஊத்தங்கரையில் இருந்து அரூர் நோக்கி வந்த கார் மோதியதில் ராமமூர்த்தி காயமடைந்தார். அரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், மேல்சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவர் உயிரிழந்தார்.
     விபத்தில் உயிரிழந்த ராமமூர்த்தியின் 2 கண்களையும் அவரது குடும்பத்தினர் தானமாக அளித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai