Enable Javscript for better performance
சட்ட விழிப்புணர்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் பாலக்கோடு வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் புதுவாழ்வுத் திட்டம் சார்பில் வெள்ளிக்கிழமை சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
     புதுவாழ்வு திட்ட அணித் தலைவர் வெற்றிவேல் வரவேற்றார். தன்னார்வ சட்டப் பணியாளர் எஸ்.கே.மூர்த்தி பேசினார்.
     இதில், மகளிர் உரிமை தொடர்பாகவும், பெண் சிசுக் கொலை தடுப்புச் சட்டம், இளம்வயது திருமணம் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள், இலவச சட்ட உதவிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
     பாலக்கோடு ஒன்றிய ஆணையர் ராமஜெயம், காவல் உதவி ஆய்வாளர் சுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai