சுடச்சுட

    

    பேருந்து நிறுத்தத்தில் இருக்கைகள் சேதம்: 3 பேர் கைது

    By அரூர்,  |   Published on : 16th January 2017 08:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே பேருந்து நிறுத்தம் அருகே போடப்பட்டிருந்த சிமெண்ட் இருக்கைகளைச் சேதப்படுத்தியதாக 3 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
     பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மெணசி பேருந்து நிலைய வளாகத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக லாரிகள் நிறுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, சனிக்கிழமை இரவு பேருந்து நிலைய வளாகத்தில் லாரிகள் நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மெணசியைச் சேர்ந்த 3 பேர் பொது இடத்தில் போடப்பட்டிருந்த சிமெண்ட் இருக்கைகளை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
     இதுகுறித்து மெணசி ஊராட்சி செயலர் கண்ணன் (39) அளித்த புகாரின் பேரில், பூதநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம் மகன் சத்தி (30), மெணசியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் ஆனந்தன் (45), கணேசன் மகன் ஆசைலிங்கம் (42) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai