மொரப்பூர் கொங்கு கல்லூரியில் பொங்கல் விழா
By அரூர், | Published on : 16th January 2017 08:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மொரப்பூர் கொங்கு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் கொங்கு கல்வி அறக்கட்டளையின் தலைவர் சி.முத்து தலைமை வகித்தார்.
இசை நாற்காலி, பானை உடைத்தல், கைப்பந்து, பலூன் வெடித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்றனர். சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கொங்கு கல்வி அறக்கட்டளையின் செயலர் ரா.பன்னீர்செல்வம், பொருளர் பொ.காந்தி, தாளாளர் அ.மோகன்ராசு, கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் தீ.சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் நா.குணசேகரன், துணை முதல்வர் க.சீனிவாசன், தமிழ்த் துறைத் தலைவர் பு.சுரேஷ், உடல் கல்வி ஆசிரியர் ஆ.மகேந்திரன் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.