சுடச்சுட

  

  பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆடுகளை மேய்க்கச் சென்றவரை ஆபாசமாகத் திட்டி தாக்கிய 4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
   பூதநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (32). இவர், பூதநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வனப்பகுதியில் ஆடுகளை மேய்க்க திங்கள்கிழமை சென்றார். அப்போது வனப்பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த ஒரு கும்பல் அவரை அழைத்து ஆபாசமாகத் திட்டியதோடு அவரை தாக்கினர். இதுகுறித்து ராஜீவ்காந்தி அளித்த புகாரின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து பூதநத்தம் பகுதியைச் சேர்ந்த நிர்மல்ராஜா (23), சக்திவேல் (27), பூங்குன்றன் (32), சுரேஷ் (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள வல்லரசு (25), பவித்திரன் (24), பூசாமி (24), குமரன் (28), பசுவன் (30) ஆகியோரை தேடி வருகின்றனர்.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai