சுடச்சுட

  

  இளைஞர்கள் இடையே மோதல்: வி.சி. கட்சியினர் சாலை மறியல்

  By அரூர்,  |   Published on : 18th January 2017 09:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடத்தூர் அருகே இளைஞர்கள் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், புதுரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த சின்ன பையன் மகன்கள் ரஞ்சித்குமார், விஜயகுமார் இருவரும் கடத்தூர்- புதுரெட்டியூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அதே வழியில் புதுரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் பழனி உள்ளிட்ட 3 பேர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
   அப்போது மோட்டார் சைக்கிளை முந்திச் செல்வதில் இருதரப்பு இளைஞர்கள் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
   இச்சம்பவம் தொடர்பாக இருதரப்பிலும் போலீஸார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலர் பொ.மு.நந்தன், தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலர் கி.ஜானகிராமன், இளம் சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாநிலத் துணைச் செயலர் கி.அதியமான் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கடத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
   தகவல் அறிந்து வந்த தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், டிஎஸ்பி எஸ்.தட்சணாமூர்த்தி ஆகியோர் மறியலில் ஈடுபட்டோரை சமரசம் செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை ஏற்று
   விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மறியலை கைவிட்டனர். இந்த மோதல் சம்பவம் தொடர்பாக 9 பேரிடம் கடத்தூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai