சுடச்சுட

    

    தருமபுரி அருகே சீரான குடிநீர் விநியோகிக்கக் கோரி, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
     நல்லம்பள்ளியை அடுத்த, மாதேமங்கலம் ஊராட்சிக்குள்பட்டது பாளையத்தானூர் கிராமம். இக் கிராமத்தில், சுமார் 120-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இக் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க ஊராட்சி நிர்வாகம் சார்பில் இரண்டு ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது.
     இதில், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட ஒரு ஆழ்துளைக் கிணறுக்கு இதுவரை மின் இணைப்புப் பெறப்படவில்லையாம். இதனால், மற்றொரு ஆழ்துளைக் கிணறு மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
     இந் நிலையில், அண்மைக் காலமாக இந்த ஆழ்துளைக் கிணறும் பழுதடைந்து தண்ணீர் சரிவர விநியோகிக்கப்படுவதில்லை. இதுகுறித்து கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
     இதனால், அக் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காலிக் குடங்களுடன் தருமபுரி-மிட்டாரெட்டி அள்ளி சாலையில் பாளையத்தானூர் பேருந்து நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.
     தகவல் அறிந்து நல்லம்பள்ளி வட்டாட்சியர் ராஜசேகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரத்தினர், அதியமான்கோட்டை காவல் ஆய்வாளர் லட்சுமண குமார் மற்றும் போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம், விரைந்து குழாய்கள் சீரமைத்து தண்ணீர் வழங்கவும், மற்றொரு ஆழ்துளைக் கிணறு இயங்க மின் இணைப்பு பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai