சுடச்சுட

    

    தருமபுரி, கிருஷ்ணகிரியில் எம்.ஜி.ஆர். 100-வது பிறந்த நாள் கொண்டாட்டம்

    By தருமபுரி / கிருஷ்ணகிரி,  |   Published on : 18th January 2017 09:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரியில் அதிமுக, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் செவ்வாய்க்கிழமை எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
     அதிமுக சார்பில் அக்கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் தொ.மு.நாகராஜன் தலைமையில் தருமபுரி அதிமுக மாவட்ட அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆரின் உருவச் சிலைக்கு நகரச் செயலர் குருநாதன், நகர்மன்ற முன்னாள் தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
     அதேபோல, அதியமான்கோட்டையில் உள்ள எம்ஜிஆர் உருவச் சிலைக்கு மாவட்ட முன்னாள் செயலர் எம்.முனுசாமி தலைமையிலும், நல்லம்பள்ளியில் ஒன்றியச் செயலர் (கிழக்கு) சிவப்பிரகாசம் தலைமையிலும் அக்கட்சி நிர்வாகிகள் எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்தனர்.
     பழைய தருமபுரியில் ஒன்றியச் செயலர் (தெற்கு) எஸ்.பாஸ்கர், அதிமுக நிர்வாகிகள் அப்பகுதி எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
     இதேபோல, பென்னாகரம், காரிமங்கலம், பாலக்கோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள எம்ஜிஆர் சிலை மற்றும் உருவப்படம் வைத்து அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினர்.
     தேமுதிக சார்பில் அக்கட்சி மாவட்டச் செயலர் வி.இளங்கோவன் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் நிர்வாகிகள், காவேரிவர்மன், தம்பி ஜெய்சங்கர் உள்ளிட்டோர் தருமபுரி காமாட்சியம்மன் தெருவில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
     திராவிடர் கழகம் சார்பில், மாவட்டச் செயலர் சிவாஜி தலைமையில், மாநில நிர்வாகி ஊமை ஜெயராமன், மண்டலச் செயலர் கரு.பாலன், பகுத்தறிவாளர் கழக மாநில நிர்வாகி தகடூர் தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
     இதேபோல, மதிமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் ஆ.தங்கராஜ் தலைமையில் மாவட்ட துணைச் செயலர்கள் பி.எம்.ராஜாமணி, எச்.எஸ்.சிவலிங்கம் உள்ளிட்டோர் பழைய தருமபுரி பேருந்து நிறுத்தத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். மேலும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
     பாப்பிரெட்டிப்பட்டியில்...
     ஒன்றியச் செயலர் வி.சி.கௌதமன் தலைமையில் கட்சியினர் பாப்பம்பாடி, ஆலாபுரம், வெங்கடசமுத்திரம், பாப்பிரெட்டிப்பட்டி, இருளப்பட்டி, அ.புதுப்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் எம்.ஜி.ஆரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
     அதைத் தொடர்ந்து அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
     எம்.ஜி.ஆர் மன்ற ஒன்றியச் செயலர் எஸ்.தங்கமணி, ஒன்றிய துணைச் செயலர் பொன்மணி, அவைத் தலைவர் ராமகிருஷ்ணன், ஊராட்சிச் செயலாளர் ஆலாபுரம் டி.சக்திவேல், மூத்த நிர்வாகி வி.டி.கருணாகரன், நகரச் செயலர்கள் ஜெ.சரவணன், டோமினிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     அரூரில்...
     அரூரில் பேரவை உறுப்பினர் ஆர்.ஆர்.முருகன் தலைமையில், அதிமுகவினர் கச்சேரிமேடு, வர்ணதீர்த்தம், பேருந்து நிலையம், கடைவீதி, மஜீத்தெரு, கீழ்பாட்சாபேட்டை வழியாக அமைதி ஊர்வலம் சென்றனர்.
     தொடர்ந்து, அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் எதிரே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலர் சி.தென்னரசு, தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத் தலைவர்கள் கீரை எஸ்.சம்பத், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, க.வேலு, பேரூராட்சி முன்னாள் தலைவர் பி.காவேரி, இலக்கிய அணி ஒன்றியச் செயலர் சம்பத்குமார், வழக்குரைஞர் அருவி ஆர்.வேடியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     கிருஷ்ணகிரியில்...
     கிருஷ்ணகிரி நகர அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் கேசவன் தலைமை வகித்தார். மாவட்ட பேரவைச் செயலாளர் செல்வம், நகர எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     நிகழ்ச்சியில் எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அத்துடன் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர்.
     பெத்ததாளப்பள்ளியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு ஒன்றியச் செயலாளர் சோக்காடி ராஜன் தலைமையில் மாலை அணிவித்து, கேக் வெட்டியும் கொண்டாடினர். நிகழ்ச்சியில் தொகுதிச் செயலாளர் காத்தவராயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     கிருஷ்ணகிரியை அடுத்த கொய்யாங்கொட்டாய், கிட்டம்பட்டி கிளை அதிமுக சார்பில் நடைபெற்ற விழாவில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.
     பர்கூர் ஒன்றியம் சார்பில் பர்கூர் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்துக் கொண்டாடினர். சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி., சி.பெருமாள், தருமபுரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் தென்னரசு, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் மாதையன், ஒன்றியச் செயலாளர் ஜெயபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     போச்சம்பள்ளியில்...
     போச்சம்பள்ளி அதிமுக-வின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் ஊராட்சி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார், ஒன்றிய துணைச் செயலாளர் சக்கரவர்த்தி, எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் தூயமணி, இலக்கிய அணி செயலாளர் செந்தில் சண்முகம், முன்னாள் ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் திருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு கேக் வழங்கப்பட்டது.
     நகரச் செயலாளர் ரஜினிகாந்த், ஊராட்சிச் செயலாளர் வைரவன், வங்கித் தலைவர் செட்டிகுமார், முன்னாள் கவுன்சிலர் புனிதவதி நாகராஜ், திருப்பதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     ஊத்தங்கரையில்...
     ஊத்தங்கரை தொகுதி அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினர் மனோ ரஞ்சிதம் நாகராஜ் தலைமை வகித்தார். பர்கூர் முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணமுர்த்தி, ஊத்தங்கரை ஒன்றியச் செயலாளர் எ.சி.தேவேந்திரன், மாநில நிலவள வங்கித் தலைவர் சாகுல் அமீது, மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் நாகராஜ், நகரச் செயலாளர் சிவானந்தம், மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் உறுப்பினர் திருஞானம், ஒன்றிய குழு முன்னாள் தலைவர் கிருஷ்ணன், ஒன்றிய விவசாய அணிச் செயலாளர் வேங்கன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
     நிகழ்ச்சியில் நான்கு முனை சந்திப்பில் உள்ள எம்.ஜி.ஆர். உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நகரப் பொறுப்பாளர்கள் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     ஒசூரில்...
     ஒன்றிய அதிமுக சார்பில் பாகலூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியத் துணைச் செயலாளர் ஜெயராமன், பொருளாளர் நாராயணசாமி, ரவிகுமார், ஜெயகுமார், முனிராமப்பா உள்ளிட்ட பங்கேற்று எம்.ஜி.ஆரின் உருவப படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.
     ராயக்கோட்டை சந்திப்பில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு ஒசூர் நகர அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் ஒசூர் நகரச் செயலாளர் எஸ்.நாராயணன், மாவட்ட பொருளாளர் கே.நாராயணன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் பி.எம்.நஞ்சுண்டசாமி, முன்னாள் கவுன்சிலர் ஜெ.பி (எ) ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
     சூளகிரியில் நடைபெற்ற விழாவில் சூளகிரி ஒன்றியக் குழு முன்னாள் தலைவரும், சூளகிரி ஒன்றியச் செயலாளருமான ஏவிஎம் மது (எ) ஹேம்நாத் தலைமையில் அதிமுகவினர் எம்ஜிஆரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர், அன்னதானம் நடைபெற்றது. இதில் ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் பிரபாகரன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் தாயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
     
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai