சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே வறட்சியால் பாதிக்கப்பட்டதில் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
     கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே தொகரப்பள்ளியைச் சேர்ந்தவர் விவசாயி வெங்கடசாமி (58). இவர், தனது இரண்டரை ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில், வறட்சி காரணமாக பயிர் காய்ந்ததால் அவருக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், வேதனை அடைந்த அவர் அண்மையில் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், விவசாயி வெங்கடசாமி திங்கள்கிழமை உயிரிழந்தார். மத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வருகின்றனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai