சுடச்சுட

  

  அரூரிலிருந்து தருமபுரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

  By அரூர்,  |   Published on : 20th January 2017 09:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரூரிலிருந்து தருமபுரிக்கு கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
   அரூரிலிருந்து தருமபுரிக்கு தினமும் 20-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் மொரப்பூர் ரயில் நிலையம் முக்கியப் பகுதியாக உள்ளது.
   மாவட்டத்தின் தலைநகரம் தருமபுரி என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அரூர், மொரப்பூர், கடத்தூர், கோட்டப்பட்டி உள்ளிட்ட வட்டாரப் பகுதியில் இருந்து தருமபுரிக்கு வந்து செல்கின்றனர்.
   அதேபோல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள், அலுவலகப் பணியாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் தருமபுரிக்கு வந்து செல்கின்றனர்.
   பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், அதற்கேற்ப பேருந்து வசதிகள் இன்னமும் அரூரில் இருந்து தருமபுரிக்கு இல்லை. குறைவான அரசுப் பேருந்துகளே இயக்கப்படுவதால் காலை, மாலை நேரங்களில் பேருந்துகளில் அதிகளவில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
   கிடைக்கும் பேருந்துகளில் ஏறி நின்றவாறே செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, அரூரிலிருந்து தருமபுரிக்குக் கூடுதலாக அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகளின் எதிர்பார்க்கின்றனர்.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai