ஜல்லிக்கட்டு: அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
By தருமபுரி, | Published on : 20th January 2017 09:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, தருமபுரியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் சுருளிநாதன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் எஸ்.தமிழ்செல்வி, மாவட்டப் பொருளர் கே.புகழேந்தி உள்ளிட்டோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும். அவசரச் சட்டம் இயற்றி உடனடியாக ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதே போல, நல்லம்பள்ளியில் வட்டத் தலைவர் மோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், பென்னாகரத்தில் வட்டத் தலைவர் லட்சுமி தலைமையிலும், காரிமங்கலத்தில் வட்டத் தலைவர் கோபால் மற்றும் பாலக்கோட்டில் வட்டத் தலைவர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.