சுடச்சுட

  

  ஜல்லிக்கட்டு: செல்லிடப்பேசி கோபுரம் மீது ஏறி போராட்டம்

  By தருமபுரி,  |   Published on : 20th January 2017 09:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி, தருமபுரி அருகே ஒருவர் செல்லிடப்பேசி கோபுரத்தின் மீது ஏறி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டார்.
   தருமபுரி அருகே உள்ள ஏ.ஜெட்டிஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (40). இவர், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும். அவசரச் சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, முழக்கங்கள் எழுப்பியவாறு அதியமான்கோட்டையில் உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
   தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீஸார், தருமபுரி தீயணைப்புத் துறையினர் உதவியுடன், போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழே இறக்கினர். இது தொடர்பாக, போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai