சுடச்சுட

    

    தருமபுரியில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி, மாணவர்கள், இளைஞர்கள் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம், தர்னா உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
     தருமபுரி அரசு கலைக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி தொலைத்தொடர்பு அலுவலகம் முன் பல்வேறு கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் தர்னாவில் ஈடுபட்டனர். இதேபோல இலக்கியம்பட்டி, பாளையம்புதூர், உள்பட தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     இதில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும். காட்சிப்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து காளைகளை நீக்க வேண்டும். கலாசாரத்தின் எதிராக செயல்படும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி, முழக்கங்கள் எழுப்பினர். இரவு நேரங்களில் இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி, அப்பகுதிகளில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
     அங்கன்வாடி ஊழியர் சங்கம் ஆதரவு: ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி இளைஞர்கள் நடத்திவரும் போராட்டத்துக்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அச் சங்கத்தின் தருமபுரி மாவட்டத் தலைவர் சி.அங்கம்மாள் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் கலாசார விளையாட்டை நடத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இளைஞர்களின் போராட்டத்துக்கு தங்களது சங்கம் முழு ஆதரவு அளிக்கிறது எனவும் தெரிவித்தார். இதேபோல, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai