சுடச்சுட

    

    மாநிலம் முழுவதும் இன்று தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை

    By தருமபுரி,  |   Published on : 20th January 2017 09:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை கருதி, தனியார் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் மாநிலச் செயலர் டிஎன்சி இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
     தருமபுரியில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை எதிர்த்தும் தமிழ்நாட்டில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, பல்வேறு வணிக அமைப்புகளும், லாரி உரிமையாளர் சங்கத்தினரும் வெள்ளிக்கிழமை போராட்டம் அறிவித்துள்ளனர்.
     எனவே, மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வெள்ளிக்கிழமை ஒரு நாள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்றார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai