சுடச்சுட

    

    குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்கக் கோரி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் கே.சண்முகசாந்தி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் சி.அங்கம்மாள் தொடக்கி வைத்துப் பேசினார். அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கே.துரை உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
     ஆர்ப்பாட்டத்தில், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தி, 20 சதவீத ஊதியத்தை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும். ஓய்வுபெறும்போது வழங்கும் ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும். மேலும், பணிகொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். திட்டப் பணிகளை தவிர, பிற துறைப் பணிகள் செய்ய கட்டாயப்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
    விபத்தில் சிறைக் காவலர் சாவு
    வாணியம்பாடி, ஜன. 20:  திருப்பத்தூர் அருகே மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் சிறைக் காவலர் உயிரிழந்தார்.
    தருமபுரி மாவட்டம், அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (30). இவர் திருப்பத்தூரில் உள்ள கிளைச் சிறையில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல் பணிக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் தருமபுரியிலிருந்து திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருப்பத்தூரை அடுத்த லக்கிநாயக்கன்பட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலை ஓரத்தில் உள்ள புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த பெருமாள் நிகழ்விடத்திலேயே இறந்தார்.
    இதுகுறித்து கந்திலி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பெருமாளுக்கு கடந்த திருமணமாகி தாரணி என்ற மனைவியும், ஒன்றரை வயதில் மகனும் உள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai