சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில், வருவாய்த் துறை பணியாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.
     தருமபுரி மாவட்டம், பாலக்கோடு நகரைச் சேர்ந்தவர் மாதேஷ் மனைவி சாந்தி (42). இவர், காரிமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை வருவாய் உதவியாளராக பணியாற்றி வந்தார். அதே அலுவலகத்தில் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (24) கணினி இயக்குபவராக பணியாற்றி வந்தார்.
     வெள்ளிக்கிழமை மாலை பணி முடித்து இருசக்கர வாகனத்தில் ஊருக்குப் புறப்பட்ட மாரியப்பனுடன் சாந்தியும் சென்றுள்ளார். கெட்டூர் மேடு பகுதியில் சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டரை முந்திச் செல்ல மாரியப்பன் முயன்றுள்ளார்.
     அப்போது எதிரில் வந்த இருசக்கர வாகனமும், மாரியப்பன் சென்ற வாகனமும் மோதிக் கொண்டதில் இரு வாகனங்களில் சென்றவர்களும் நிலைதடுமாறி சாலையில் விழுந்தனர்.
     இதில், சாந்தி, மாரியப்பன் ஆகியோர் சாலையின் இடதுபுறமாக விழுந்ததில் பின் தொடர்ந்து வேகமாக வந்த டிராக்டர் அவர்கள் மீது ஏறியது. இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai