சுடச்சுட

    

    தேய்பிறை அஷ்டமி: வெள்ளிக்கவச அலங்காரத்தில் காலபைரவர்

    By DIN  |   Published on : 21st January 2017 07:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேய்பிறை அஷ்டமியையொட்டி, அருள்மிகு காலபைரவர் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
     தருமபுரி அருகே அதியமான்கோட்டையில் உள்ள நூற்றாண்டு பழைமை வாய்ந்த அருள்மிகு தட்சணகாசி காலபைவர் கோயிலில், தேய்பிறை அஷ்டமி பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இதையொட்டி, கோயில் நிர்வாகம் சார்பில் காலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, வெள்ளிக்கவசம் அணிந்து பக்தர்களுக்கு அருள்மிகு காலபைரவர் அருள்பாலித்தார்.
     மேலும், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாம்பல் பூசணியில் நெய் தீபம் ஏற்றியும், கோயில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்தும் சுவாமியை வழிபட்டனர். இதையடுத்து, இரவு பைரவர் வீதி உலா மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது. திருவிழாவையொட்டி, அதியமான்கோட்டை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai