சுடச்சுட

  

  தருமபுரி நகரில் பெரும்பாலான பணப் புழக்கப் பகுதிகளில் 10 ரூபாய்க்கான நாணயங்களை வியாபாரிகள் வாங்க மறுப்பதால், பொதுமக்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
   உயர் மதிப்புள்ள பணத்தாள்களை மதிப்பிழக்கம் செய்த மத்திய அரசின் நடவடிக்கையைத் தொடர்ந்து 10 ரூபாய்க்கான நாணயத்தின் மீதும் குழப்பம் ஏற்பட்டது. அந்த நாணயங்களில் போலி அதிகம் வந்துவிட்டதாகவும், வங்கிகள் இந்த நாணயங்களை வாங்க மறுப்பதாகவும் தொடக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. அப்போதிருந்தே இதற்கான மறுப்பை வங்கிகளும், அரசும் தெளிவுப்படுத்தி வந்துள்ளன.
   இதற்குக் காரணம் இங்குள்ள வியாபார நிறுவனங்கள் எதுவும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றன என்பது மட்டுமல்ல, அரசுப் பேருந்துகள் மற்றும் ஓரிரு கூட்டுறவு வங்கிகளிலும் வாங்க மறுக்கிறார்கள் என்பதே பொதுமக்களின் அச்சமாக மாறியிருக்கிறது. இதனால், கிராமப் புறங்களில் சாதாரண பெட்டிக் கடைகளில் கூட 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர்.
   ஏற்கெனவே பூதாகரமாகக் கிளப்பி விடப்பட்டிருக்கும் புரளிகளால், கடைகளில் இருந்தோ, பேருந்துகளில் இருந்தோ 10 ரூபாய் நாணயங்களை பொதுமக்கள் சில்லறைக்காக திரும்ப வாங்க மறுக்கின்றனர் என்பது வியாபார நிறுவனங்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.  எனவே, மாவட்ட நிர்வாகம் இதுதொடர்பாக உறுதியான அறிவிப்பை வெளியிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், வங்கிகளிலும், அரசுப் பேருந்துகளிலும் 10 ரூபாய் நாணயங்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான அறிவுரைகளை வழங்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  இந் நிலையில், 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தியை நம்பாதீர் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
   மேலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், வணிக நிறுவனங்கள், சிறு வணிக அங்காடிகள் ஆகியவை அனைத்திலும் 10 ரூபாய் நாணயம் செல்லுபடியாகும். எனவே, வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai