Enable Javscript for better performance
ஆதார் அட்டை பெற்றுத் தருவதாக பணம் வாங்கினால் சிறை, அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    ஆதார் அட்டை பெற்றுத் தருவதாக பணம் வாங்கினால் சிறை, அபராதம்

    By DIN  |   Published on : 22nd January 2017 02:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆதார் அட்டை பெற்றுத் தருவதாகக் கூறி யாரேனும் பொதுமக்களிடம் பணம் வாங்கினால் அவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    தருமபுரி மாவட்டத்தில் ஆதார் சேர்க்கைப் பணி அரசு கேபிள் டிவி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் வாயிலாக நிரந்தர சேர்க்கை மையங்களில் நடைபெற்று வருகிறது. இந்த மையங்களில் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. இது ஒரு கட்டணமில்லா சேவையாகும்.
    ஆனால், ஆதார் அட்டை பெற்றுத் தருவதாகக் கூறி சிலர் கட்டணம் வசூலிப்பதாக தகவல்கள் வருகின்றன. இதுபோன்ற முறைகேடுகளில் யாரேனும் ஈடுபட்டால் அவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதிக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் விதிமுறைகளில் வழி செய்யப்பட்டுள்ளது.
    எனவே, ஆதார் அட்டையைப் பெற அரசு நிறுவனங்களால் நகராட்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடத்தப்படும் நிரந்தர சேர்க்கை மையங்களை மட்டுமே அணுகி பொதுமக்கள் பயன் பெறலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai