சுடச்சுட

    

    ஊத்தங்கரையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம்

    By DIN  |   Published on : 22nd January 2017 02:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊத்தங்கரை ஒன்றிய, நகர அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் ஊத்தங்கரை நான்குமுனை சாலை சந்திப்பில் அண்மையில் நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலர் எ.சி.தேவேந்திரன் தலைமை வகித்தார். மாநில நிலவள வங்கி தலைவர் சாகுல் அமீது, மாவட்ட அண்ணா தொழில்சங்க தலைவர் நாகராஜ், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் திருஞானம், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் கிருஷ்ணன், ஒன்றிய விவசாய அணி செயலர் வேங்கன், முன்னாள் எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலர் கண்ணன், மருத்துவரணி இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகரச் செயலர் பி.கே.சிவானந்தம் வரவேற்றார்.
    விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியது:
    எம்.ஜி.ஆர் தொடக்கிய அதிமுக எனும் இரும்புக் கோட்டையை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. இது தலைவர் கட்டுப்பாட்டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் சீரிய தலைமையில் வழிநடத்திய இயக்கமாகும்.
    தமிழக மக்களின் வளர்ச்சி, கல்வித் துறையில் வளர்ச்சி என அனைத்து துறையிலும் வளர்ச்சி அடைந்தது அதிமுக ஆட்சியில்தான். மேலும், ஏழை எளிய மக்கள். விவசாயிகள் முன்னேற்றத்துக்கு பல்வேறு திட்டங்கள், படித்த இளைஞர்கள் தொடர்ந்து கல்வி பயில தொழில்கல்வி கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
    இதன்மூலம் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்கள் உயர் கல்வி பயிலும் சதவீதம் உயர்ந்துள்ளது. நல்ல திட்டங்களை வகுத்து தமிழக வளர்ச்சிக்கு வித்திட்டவர் எம்.ஜி.ஆர். அவர் வழியில் நடைபெறும் அரசு தமிழக மக்கள் வளர்ச்சியில் தொடர்ந்து செயல்படும் என்றார்.
    ஊத்தங்கரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ்,
    பால் வளத் தலைவர் தென்னரசு, கிருஷ்ணகிரி முன்னாள் நகர்மன்றத் தலைவர் தங்கமுத்து ஆகியோர் விழாவில் பேசினர்.
    கூட்டத்தில் கண்ணன், சிக்னல்ஆறுமுகம், சக்திவேல், ரத்தினம், சின்னதம்பி மற்றும் ஒன்றிய நகர கிளை கழகத் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றியச் செயலர் பண்டரிநாதன் நன்றி கூறினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai