Enable Javscript for better performance
எம்.தொட்டம்பட்டியில் என்.எஸ்.எஸ். முகாம்- Dinamani

சுடச்சுட

    

    மொரப்பூர் கொங்கு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சார்பில், அரூரை அடுத்த எம்.தொட்டம்பட்டியில் என்.எஸ்.எஸ். முகாம் அண்மையில் நடைபெற்றது.
    கொங்கு கல்வி அறக்கட்டளையின் தலைவர் சி.முத்து முகாமைத் தொடக்கிவைத்தார். தூய்மைப் பணிகள், மரம் நடுதல், சுகாதார மேம்பாடு, பொது இடங்களில் சுகாதாரப் பணிகள், கோயில் வளாகங்களில் வெள்ளை அடித்தல் உள்ளிட்ட பொது சேவைகளில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
    கொங்கு கல்வி அறக்கட்டளையின் செயலர் ரா.பன்னீர்செல்வம், பொருளர் பொ.காந்தி, தாளாளர்கள் அ.மோகன்ராசு, தீ.சொக்கலிங்கம், பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) சௌந்தரராஜன், கல்லூரி முதல்வர் நா.குணசேகரன், துணை முதல்வர் கே.சீனிவாசன், நாட்டு நலப் பணிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai