சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார்.
    பாப்பாரப்பட்டியை அடுத்த கிட்டம்பட்டியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (27). பெங்களூரில் வேலை செய்து வருகிறார். சனிக்கிழமை தனது உறவினரின் இறப்புச் சடங்குக்காக ஒகேனக்கல்லுக்கு வந்தார். முதலைப் பண்ணை எதிரேயுள்ள காவிரியாற்றில் குளித்துக் கொண்டிருந்த போது தண்ணீரில் மூழ்கியதாகத் தெரிகிறது.
    உறவினர்கள் அளித்த தகவலின் பேரில், தீயணைப்புப் படையினர் மஞ்சுநாத்தைத் தேடினர். இதனிடையே, மாலையில் அதே பகுதியில் அவரது சடலம் மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai