சுடச்சுட

    

    ஓய்வூதியம் பெறுவோர் உயிர்வாழ் சான்று ஒப்படைக்க அவகாசம் நீட்டிப்பு

    By DIN  |   Published on : 22nd January 2017 02:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஓய்வூதியம் பெறுவோர் தங்களது உயிர்வாழ் சான்றை ஒப்படைக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    சேலம் துணை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் எஸ்.கே.தாகூர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    தருமபுரி மாவட்டத்தில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்தின் கீழ் அனைத்து ஓய்வூதியர்களும், தங்களது வாழ்நாள் சான்றிதழ், மறுமணம் செய்யா சான்றிதழ் ஆகியவற்றை ஜீவன் பிரமாண இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வருகிற பிப்.28-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
    ஓய்வூதியர்கள் தங்கள் உயிர் வாழ்நாள் சான்றிதழை பத்திர வடிவில் சமர்ப்பித்திருந்தால் அது ஏற்று கொள்ளப்பட மாட்டாது. எனவே, அனைத்து ஓய்வூதியர்களும் தங்கள் வாழ்நாள் சான்றிதழை ஜீவன் பிரமாண இணையதளத்தில் கை விரல் ரேகை அல்லது கண் கருவிழி பதிவினை பிப்ரவரி 28-க்குள் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
    இதை ஓய்வூதியம் பெறும் வங்கிக் கிளைகளான சேலம் வருங்கால வைப்புநிதி அலுவலகம், ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வைப்பு நிதி அலுவலகம், தமிழ்நாடு இ-சேவை மையங்கள், பொது சேவை மையங்களில் பதிவேற்றம் செய்யலாம்.
    உயிர் வாழ்நாள் சான்றிதழை பதிவேற்றம் செய்ய ஓய்வூதிய எண், ஆதார் நகல், வங்கிக் கணக்கு எண், செல்லிடப்பேசி எண் ஆகிய விவரங்களை கொண்டுவர வேண்டும். இறுதி தேதிக்குள் பதிவு செய்யாதவர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai