Enable Javscript for better performance
குடியிருப்புப் பகுதிகளில் உயர் அழுத்த  மின் பாதை அமைக்க எதிர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    குடியிருப்புப் பகுதிகளில் உயர் அழுத்த  மின் பாதை அமைக்க எதிர்ப்பு

    By DIN  |   Published on : 22nd January 2017 02:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உயர் அழுத்த மின் கம்பிகளை குடியிருப்புப் பகுதிகளின் வழியே கொண்டு செல்ல பொதுமக்கள் சனிக்கிழமை எதிர்ப்புத் தெரிவித்தனர்.
    தருமபுரி அருகே பிடமனேரி மொன்னையன் கொட்டாய் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீட்டுமனைகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில நாள்களாக சோம்பட்டியில் உள்ள பவர் கிரீட்டிற்கு மின்சாரம் கொண்டு செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகள் கொண்டு செல்ல, கோபுரங்கள் அமைக்கும் பணிக்காக இடத்தை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியே எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
    பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக, உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் பணியை, மின் வாரிய அலுவலர்கள் தற்காலிகமாகக் கைவிட்டனர்.
    மிட்டப்பள்ளியில் எருது விடும் விழா
    ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளியில் எருது விடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது .
    பள்ளி,கல்லூரி மாணவர்கள், பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து விழாவில் கலந்து கொண்டனர்.
    ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பினர். மேலும், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நிரந்தரமாக நீக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai