சுடச்சுட

  

  பென்னாகரத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தலித் உரிமை நாள் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
  ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடைபெற்ற, இந்த நிகழ்ச்சிக்கு வட்டத் தலைவர் வி.ரவி தலைமை வகித்தார். மாநில உதவித் தலைவர் பி.டில்லிபாபு, மாவட்டத் தலைவர் டி.எஸ்.ராமச்சந்திரன், மாவட்டச் செயலர் வழக்குரைஞர் டி.மாதையன் உள்ளிட்டோர் பேசினர்.
  கருத்தரங்கில், ரோஹித் வெமுலா இறப்புத் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்கள் மீது, இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அவரது இறப்புக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
  அதேபோல, கல்வி நிலையங்களில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு இனி இதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது. இதற்கான நடவடிக்கையை தெலங்கானா மாநில அரசும், மத்திய அரசும் எடுக்க வேண்டுமென வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு நிர்வாகிகள் பேசினர்.
  தலித் உபக் குழுத் தலைவர் கே.குப்புசாமி, விவசாயத் தொழிலார் சங்க மாவட்டத் தலைவர் சோ.அருச்சுணன், அருந்ததியர் மக்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் கே.சிவாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai