Enable Javscript for better performance
அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    அரூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி சங்கர் (55) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
    அரூர் வர்ணதீர்த்தம் தெருவைச் சேர்ந்த ராதா மகன் சங்கர் (55). தொழிலாளியான இவர் அரூர் இந்தியன் வங்கி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் நின்றிருந்தாராம்.  அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் மோதியதில் சங்கர் காயமடைந்தார். காயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து அரூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai