சுடச்சுட

    

    அரூர் அரசு மருத்துவமனையில் தேசிய தரச் சான்று மதிப்பீட்டு குழு ஆய்வு

    By DIN  |   Published on : 23rd January 2017 07:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரூர் அரசு மருத்துவமனையில் தேசிய தரச் சான்று மதிப்பீட்டு குழுவினர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
    தமிழகத்தில் காயகல்பம் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சைகள் அளிக்கும் மருத்துவமனைகளை தேசிய தரச் சான்று மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.
    இந்த ஆய்வில் சிறந்த மருத்துவமனையாகத் தேர்வு செய்யப்படும் அரசு மாவட்ட தலைமை மருத்துவனைக்கு முதல் பரிசாக ரூ.50 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.20 லட்சமும் வழங்கப்படுகிறது. இதேபோல, வட்டார அளவிலான அரசு மருத்துவமனைகளுக்கு முதல் பரிசாக ரூ.15 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.5 லட்சமும் வழங்கப்படுகிறது.
    இந்த நிலையில், அரூர் அரசு வட்டார தலைமை மருத்துவமனையை தேசிய தரச்சான்று மதிப்பீட்டு குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், குடிநீர் வசதிகள், சுகாதார வசதிகள், கழிப்பிட வசதிகள், மருத்துமனை வளாகத்தில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகள், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை, காலிப் பணியிடங்கள், தேவையான கூடுதல் மருத்துவ வசதிகள், சிகிச்சைக்கு வருகை தரும் புற நோயாளிகள், உள் நோயாளிகள் எண்ணிக்கை உள்ளிட்டவைகள் குறித்து இந்தக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai