சுடச்சுட

  

  கோடியூரில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

  By DIN  |   Published on : 23rd January 2017 07:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்துக்குள்பட்ட கோடியூரில் தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்புப் புகைப்படக் கண்காட்சியை மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார்.
  தருமபுரி மாவட்டத்தில் நீர்நிலைகளை மேம்படுத்த தாய் திட்டத்தின் கீழ் ரூ. 10.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மேற்கொள்ளப்பட்ட பணிகள் உள்ளிட்ட மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகள் மற்றும் மாநில அளவில் சிறப்பான திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.
  கண்காட்சி தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர், கோட்டாட்சியர் ராமமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. சண்முகசுந்தரம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai