சுடச்சுட

  

  முறையாக விண்ணப்பித்தால் புதிய குடும்ப அட்டைகள் தடங்கலின்றிக் கிடைக்கும்: அமைச்சர்

  By DIN  |   Published on : 23rd January 2017 07:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முறையாக விண்ணப்பித்தால் புதிய குடும்ப அட்டைகள் தடங்கலின்றி வழங்கப்படும் என்றார் மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்.
  தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், எருமியாம்பட்டி, கோடியூர் ஆகிய பகுதிகளில் பகுதிநேர நியாய விலைக் கடைகளை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து, பயனாளிகளுக்கு பொருள்களை வழங்கி அவர் பேசியது:
   தருமபுரி மாவட்டத்தில் 22,590 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய அட்டை கோரி விண்ணப்பிப்போர், உரிய தகவல்களை ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் விரைவாகவும், தடையின்றியும் புதிய குடும்ப அட்டைகள் வழங்க முடியும்.
   200 குடும்ப அட்டைகள் உள்ள பகுதியில்தான் பகுதி நேர நியாயவிலைக் கடைகள் அமைக்க முடியும் என்ற விதியை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன்.  விதிகள் தளர்த்தப்பட்டு தற்போது 150 குடும்ப அட்டைகள் உள்ள பகுதிக்கே பகுதிநேர நியாயவிலைக் கடைகள் திறக்கப்படுகின்றன என்றார் அன்பழகன்.
   நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர், கோட்டாட்சியர் ராமமூர்த்தி, துணைப் பதிவாளர் சொ. தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடத்திலேயே செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு விளம்பர வாகனம் மூலம் அரசின் நலத் திட்டங்கள் விளக்கப்படமாக ஒளிபரப்பப்பட்டன.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai