Enable Javscript for better performance
இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட சேலம் இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட சேலம் இளைஞர் கைது

    By தருமபுரி,  |   Published on : 24th January 2017 09:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரியில் தொடர்ந்து வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததாக சேலத்தைச் சேர்ந்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.
     தருமபுரி, அதியமான்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்தன. இதுதொடர்பாக அதியமான்கோட்டை காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வெங்கடேசன் (29) என்ற இளைஞருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. சேலம் செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த அவரை கைது செய்து அதியமான்கோட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதில், அவரிடம் இருந்து 5 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai