குடியரசு தின விழா கலை நிகழ்ச்சி ஒத்திகை
By தருமபுரி, | Published on : 24th January 2017 09:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், குடியரசு தினவிழா கலைநிகழ்ச்சி ஒத்திகை திங்கள்கிழமை நடைபெற்றது.
வரும் 26-ஆம் தேதி குடியரசு தினவிழா தருமபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில், நடைபெற உள்ள பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
இதில், தருமபுரி ஒüவையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பாலக்கோடு அரசு மேல்நிலைப் பள்ளி, மொட்டலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, காரிமங்கலம், பாப்பாரப்பட்டி உண்டு உறைவிட பள்ளிகள், சாமிசெட்டிப்பட்டி ஈஷா வித்யாலயா, எருமியாம்பட்டி இஆர்கே மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்று கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். மாவட்டக் கல்வி அலுவலர் ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.