சுடச்சுட

  

  தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே முறையாக பொருள்கள் விநியோகிக்கக் கோரி, நியாய விலைக்கடையை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
   பென்னாகரம் வட்டத்துக்குள்பட்ட மடம் கிராமத்தில் நியாய விலைக்கடை உள்ளது. இந்தக் கடையில், சுமார் 500 குடும்ப அட்டைதாரர்கள் பொருள்களை பெற்றுவருகின்றனர்.
   இந்த நிலையில், நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிமை பொருள்களை முறையாக வழங்காமல் அண்மைக் காலமாக குறைத்து வழங்கி வருவதாகவும், தங்களுக்கு முறையாக 100 சதம் பொருள்களை வழங்க வலியுறுத்தியும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், நியாய விலைக்கடையை முற்றுகையிட்டனர்.
   இதுகுறித்து, தகவல் அறிந்த பென்னாகரம் வட்டாட்சியர் மாரிமுத்து, வட்ட வழங்கல் அலுவலர் ஆறுமுகம் மற்றும் பென்னாகரம் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பொருள்களை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai