Enable Javscript for better performance
மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக இளைஞரை, அதியமான்கோட்டை போலீஸார் போக்úஸா சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
     அதியமான்கோட்டையை அடுத்த பழனிக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (24). இவர், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.
     இதுகுறித்து, அந்த மாணவி அளித்த புகாரின் பேரில், அதியமான்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமணகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக முருகனை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai