சுடச்சுட

    

    பள்ளி மாணவியைக் கடத்தியதாக, பெங்களூரைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
     பாலக்கோடு அடுத்தை போயர் சாலையை சேர்ந்த பள்ளி மாணவி, மல்லுப்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவரை பெங்களூரைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மகன் சக்திவேல் (24) என்பவர் கடந்த 22-ஆம் தேதி கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.
     இதுகுறித்து புகாரின் பேரில், மகேந்திரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
     இதையடுத்து பள்ளி மாணவியைக் கடத்திச் சென்றதாக போலீஸார் சக்திவேலை கைது செய்தனர். மேலும், மாணவியை மீட்டு, பாலக்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
     
     
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai