Enable Javscript for better performance
ஆலயம் செல்வது மட்டும் ஆன்மிகம் இல்லை: தமிழருவி மணியன்- Dinamani

சுடச்சுட

    

    ஆலயம் செல்வது மட்டும் ஆன்மிகம் இல்லை: தமிழருவி மணியன்

    By DIN  |   Published on : 26th January 2017 09:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆலயம் சென்று வழிபடுவது மட்டும் ஆன்மிகம் இல்லை என்று தமிழருவி மணியன் கூறினார்.
    தருமபுரியில் புதன்கிழமை ஆன்மிகத்தில் ஆனந்தம் நிகழ்ச்சி, அதன் தலைவர் டி.என்.சி. மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. செயலர் சந்திரசேகர், பொருளாளர் ஜெ.பி.நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    இக் கூட்டத்தில், தமிழருவி மணியன் பேசியது: மதம் வேறு ஆன்மிகம் வேறு. மதவாதியாக இருப்பவன், ஆன்மிகவாதியாக இருப்பதில்லை. ஆன்மிகவாதி என்பவன் மதத்தைக் கடந்து இருப்பான். தன்னை காணும் உள்ளத்தில் உயிர்கள் அனைத்தையும் காண்பது ஆன்மிகம். அதாவது வேறொருவர் படும் துயரத்தை, தன் துயரமாக எண்ணி, அதனைப் போக்க வேண்டும்.
    வைஷ்ணவன் என்பவன் வீதியில் திருநாமம் இட்டு, ஆலயம் சென்று தொழுபவன் அல்ல. வீதியில் துன்புற்று கிடப்பவனைக் காணும்போது அவன் துயர் தன் துயரென எண்ணி அவனது துயரைப் போக்கும் செயலில் ஈடுபடுபவனே வைஷ்ணவன் என ஸ்ரீராமாநுஜர் கூறுகிறார்.
    அதேபோல, ஆன்மிகவாதி தொண்டு, துறவு இவ்விரு தேசிய விரதங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கிறார்.
    இதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், விவேகானந்தர் சர்வ சமய மாநாட்டில் பேசிய அந்த உரையை நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் கற்றுத்தர வேண்டும். அவருடைய புத்தகங்களை ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளுக்கு வழங்கி அதைப் பயில செய்ய வேண்டும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai