சுடச்சுட

    

    இன்றைய கிராம சபையில் நியாய விலைக் கடை ஆவணங்கள் சமூகத் தணிக்கை

    By DIN  |   Published on : 26th January 2017 09:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டங்களில் நியாயவிலைக் கடைகளின் அனைத்து ஆவணங்களும் சமூகத் தணிக்கைக்காக வைக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தெரிவித்தார்.
    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    பொது விநியோகத் திட்ட செயல்பாட்டிலும், நியாயவிலைக் கடைகளின் செயல்பாட்டிலும் வெளிப்படையான நடைமுறையைக் கொண்டு வரும் வகையில் குடியரசு தினத்தையொட்டி, வியாழக்கிழமை நடைபெறம் கிராம சபைக் கூட்டங்களில் அனைத்துக் கணக்குகளும் சமூகத் தணிக்கைக்காக வைக்கப்படவுள்ளன. நியாய விலைக் கடைகளின் அ பதிவேடு, வழங்கல் பதிவேடுகள், சிட்டா பதிவேடு, இருப்புப் பதிவேடு, ஆய்வுப் பதிவேடு, மண்ணெண்ணெய் விநியோக ரசீதுகள், ரசீது புத்தகங்கள் அனைத்தும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai