சுடச்சுட

    

    முதியவர் கொலை வழக்கில் மூவர் தருமபுரி நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தனர்.
    காரிமங்கலம் அருகே நடுப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னசாமி (60). இவரை, நிலப் பிரச்னை தொடர்பாக, கடந்த சில நாள்களுக்கு முன், அதே பகுதியைச் சேர்ந்த சிலர் கொலை செய்தனர். இது தொடர்பாக, காரிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிலரை கைது செய்தனர். மேலும், இக்கொலையில் தொடர்புடைய வேறு சிலரை தேடிவந்தனர். இந்த நிலையில், இக்கொலை வழக்குத் தொடர்பாக, முருகன், பொன்ராஜ் மற்றும் திருமுருகன் ஆகிய மூவர், தருமபுரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-இல் சரணடைந்தனர். இதையடுத்து வருகிற ஜன.31-ஆம் தேதி வரை சரணடைந்த மூவரையும் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai