சுடச்சுட

    

    கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தருமபுரி மாவட்ட கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    பென்னாகரம் வட்டம், ஏரியூரை அடுத்த காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி குப்புசாமி (56). அதே பகுதியைச் சேர்ந்தவர் வையாபுரி (27). இருவருக்கும் இடையே நிலத்  தகராறு இருந்தது. இந்த நிலையில், கடந்த 2013 மார்ச் 26-ஆம் தேதி மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஏரியூர் அருகே புதுக்காடு பகுதியில் குப்புசாமியை அரிவாளால்  வையாபுரி வெட்டி விட்டுத் தப்பினார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட குப்புசாமி, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிந்தார். இதுகுறித்து, குப்புசாமியின் சகோதரர் சுப்பிரமணி, ஏரியூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீஸார், வையாபுரி, அவரது சகோதரர் சக்திவேல், தாய் அம்மாணியம்மாள், உறவினர் நாராயணன் ஆகியோரைக் கைது செய்தனர். இந்த வழக்குத் தொடர்பான விசாரணை, தருமபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிமன்றம், குப்புசாமியை கொலை செய்த குற்றத்துக்காக வையாபுரிக்கு ஆயுள் தண்டனை, ரூ. 1,000 அபராதமும் விதித்தும், மற்ற 3 பேரை வழக்கிலிருந்து விடுவித்தும் உத்தரவிட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai