சுடச்சுட

  

  தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, காரிமங்கலம் வட்டங்களுக்குள்பட்ட பேளாரஅள்ளி, ஜக்கசமுத்திரம் ஆகிய இரு கிராமங்களில் தரம் உயர்த்தப்பட்ட புதிய கால்நடை மருந்தகங்களை மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் புதன்கிழமை திறந்து வைத்தார்.
  அப்போது அவர் பேசியது: தருமபுரி மாவட்டத்தில் 41 புதிய கால்நடை மருந்தகக் கட்டடங்கள் ரூ. 9.49 கோடியில் கட்டப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. 2016-17ஆம் ஆண்டில் செம்மாண்டகுப்பம், சின்னவத்தலாபுரம், ஒடசல்பட்டி ஆகிய 3 புதிய கால்நடை மருந்தகங்களுக்கான கட்டடங்கள் கட்டப்படவுள்ளன.
  மேலும், 2017-18-ஆம் ஆண்டில் பேளாரஅள்ளி, புளியம்பட்டி, ஜக்கசமுத்திரம், வடுகப்பட்டி மற்றும் தொட்டம்பட்டி ஆர்எஸ் ஆகிய 5 தரம் உயர்த்தப்பட்ட புதிய கால்நடை மருந்தகங்களுக்கான கட்டடங்கள் நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் கட்டப்படவுள்ளன.
  கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் 2011-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 567 கால்நடை மருத்துவ முகாம்கள் ரூ. 6.79 லட்சத்தில் நடத்தப்பட்டுள்ளன என்றார் அன்பழகன். தொடர்ந்து ஜக்கசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 114 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளையும் அமைச்சர் அன்பழகன் வழங்கினார். நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தலைமை வகித்தார். கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் எம். சீனிவாசன், உதவி இயக்குநர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai