தருமபுரியில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்
By DIN | Published on : 26th January 2017 09:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தருமபுரியில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தருமபுரி நெசவாளர் காலனியில் அதிமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அதன் செயலர் ராஜசேகர் தலைமை வகித்தார்.
மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அதிமுக அமைப்புச் செயலர் செம்மலை எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன், பேச்சாளர்கள் நடிகர் தியாகு, மாணிக்கம், செல்வராஜ், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் எம்.எல்.ஏ., அரூர் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர் ஆர்.ஆர்.முருகன், நகரச் செயலர் குருநாதன் உள்ளிட்ட மொழிப்போரில் உயிர் நீத்தவர்களின் தியாகத்தை போற்றி பேசினர். இதேபோல, தருமபுரி குமாரசாமிபேட்டையில் திமுக சார்பில், அக் கட்சியின் மாவட்ட செயலர் பெ.சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமையிலும், பென்னாகரத்தில், அத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பி.என்.பி. இன்பசேகரன் தலைமையிலும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம் நடைபெற்றது. இதேபோல, தருமபுரி தொலைத் தொடர்பு நிலையம் முன்பு, தமிழ்தேசிய பேரியக்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் விஜயன் தலைமையில் மொழிப்போர் தியாகிகள் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.