Enable Javscript for better performance
தருமபுரி, கிருஷ்ணகிரியில் தேசிய வாக்காளர் தின விழா- Dinamani

சுடச்சுட

    

    தேசிய ஏழாவது வாக்காளர் தினத்தையொட்டி தருமபுரி மாவட்டத்தில் "இளைஞர்கள் மற்றும் எதிர்கால வாக்காளர்களுக்கு அதிகாரமளித்தல்' என்ற தலைப்பில் வாக்காளர் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
    அரசுக் கலைக் கல்லூரியிலிருந்து புறப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாக்காளர் தின விழா நடைபெற்றது.
    விழாவில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, புதிய வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அட்டை வழங்கப்பட்டது. வாக்காளர் தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
      மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர், நாட்டுநலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜி. பிரபாகரன், மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர் ஏ. சுப்பையா, கோட்டாட்சியர் ராமமூர்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
    இதேபோல, அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
    கிருஷ்ணகிரியில்...
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும்  கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
    நகரின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்ற ஊர்வலம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றுகொள்ளப்பட்டது. புதியதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
    தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நடைபெற்ற கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்டி, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் முகமது அஸ்லாம், நகராட்சி ஆணையாளர் கண்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கலையரசி, மாவட்ட கல்வி அலுவலர் அகமதுபாஷா, வட்டாட்சியர் மோகனசுந்தரம், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் பூசன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    இதேபோல் பர்கூரில் நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை வட்டாட்சியர் இளவரசி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
    ஊத்தங்கரையில்...
    தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஊத்தங்கரையில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
    பேரணிக்கு ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியர் அமுதன் தலைமை வகித்தார். தனி வட்டாட்சியர் மதுசெழியன், தேர்தல் துணை வட்டாட்சியர் சம்பத், துணை வட்டாட்சியர் திலகம், ஊத்தங்கரை டி.எஸ்.பி.அர்சுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    பேரணியை வட்டாட்சியர் அமுதன் தொடக்கி வைத்தார். இதில், 500-க்கும் மேற்பட்ட ஸ்ரீ வித்யா மந்திர், அதியமான் மகளிர் கல்லூரி நாட்டுநலப் பணித் திட்ட மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள், ஊத்தங்கரை வருவாய் அலுவலர் குமார், கிராம நிர்வாக அலுவலர் ஆசைதம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    ஒசூரில்...
    ஒசூர் ஆர்.வி.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பேரணியை ஒசூர் சார் ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். இதில் 700-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    பேரணியில் இதில் ஒசூர் வட்டாட்சியர் தியாகராஜன், வருவாய் ஆய்வாளர்கள் சிவக்குமார், நகராட்சி பொறியாளர் குருசாமி, நகராட்சி மேலாளர் சரவணன், ஒசூர் நகர காவல் ஆய்வாளர் ராஜா சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai