Enable Javscript for better performance
தொன்போஸ்கோ கல்லூரியில் தேசியக் கருத்தரங்கு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி தொன்போஸ்கோ கல்லூரியில், தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கு ஜன.24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது.
     தன்னிறைவுள்ள விவசாயம் மற்றும் நீர்வள மேம்பாடு என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு முதல்வர் அ.மரியசூசை தலைமை வகித்தார்.
     கல்வியியல் கல்லூரி முதல்வர் மரியலூயிஸ், சமூக ஆர்வலர் பியுஷ் மனூஷ், டீப்ஸ் தொண்டு நிறுவன நிர்வாகி சங்கர், பூவிதம் பள்ளி இயக்குநர் மீனாட்சி, சமூக மேம்பாட்டு ஆலோசகர் ராஜகோபால் ஆகியோர் விவசாயம், நீர் ஆதாரங்களின் முக்கியத்துவத்தை குறித்து பேசினர்.
     மேலும், பல்வேறு கல்லூரிகளிலிருந்து 200-க்கு மேற்பட்ட சமூக பணி மாணவர்கள், வேளாண்மை, நீர்வள மேம்பாடு சார்பாக கண்காட்சி தயார் செய்தவற்றை பார்வைக்கு வைத்திருந்தனர்.
     மேலும், கருத்தரங்கில், சிறுதானிய உணவுகளான சாமை சோறு, கேழ்வரகு களி, கம்பு கூழ், புதினா, மிளகு சாதம் மற்றும் இளநீர் வழங்கப்பட்டது.
     இதில், கல்லூரி சமூக பணி துறைத் தலைவர் பிரபு, பேராசிரியர்கள் அபிராமன், செல்வநாதன், இளவரசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai