சுடச்சுட

    

    நலிந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

    By DIN  |   Published on : 28th January 2017 07:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்ற, நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
     இதுகுறித்து தருமபுரி மாவட்ட விளையாட்டு அலுவலர் நஞ்சப்பன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் சிறந்த சாதனை படைத்து, தற்போது நலிந்த நிலையில் உள்ள வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது.
     ஓய்வூதியம் பெற தமிழத்தில் வாழும் விளையாட்டு வீரர்களாக இருத்தல் வேண்டும். ரூ.6,000-க்கு மிகாமல் வருவாய் உள்ள 2016 ஏப்.1-ஆம் தேதியன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
     தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பள்ளி, கல்லூரி காலங்களில் சாதனை படைத்தவர்கள் மட்டுமே தகுதி பெறுவர். அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுச் சங்கங்களால் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டிருத்தல் வேண்டும். முதியோருக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெற தகுதியில்லை.
     பதிவுபெற்ற அலுவரால் சான்றொப்பம் இடப்பட்ட விளையாட்டுச் சான்றிதழ் நகல்கள், வருவாய், வயது சான்று நகல் ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.
    மத்திய அரசின் விளையாட்டு வீரருக்கான ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் மத்திய, மாநில அரசின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.
     இதற்கான விண்ணப்பப் படிவங்கள் தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் ரூ.10 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 31.1.2017-க்குள் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai