சுடச்சுட

  

  மாமியாரைக் கொன்ற மருமகனுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தருமபுரி மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
   தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பி.அக்ராகரத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி சின்னசாமி (எ) வேலு (36). இவரது மனைவி தீபா. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
   சின்னசாமிக்கும், அவரது மனைவிக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதன் காரணமாக, கடந்த ஆண்டு தீபா அவரது தாய் ஜெயக்கொடியின் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று விட்டாராம்.
   இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் மாமியார் வீட்டுக்குச் சென்ற வேலு, மனைவி தீபாவை தன்னுடன் வீட்டுக்கு வருவாறு அழைத்தாராம். அப்போது, மீண்டும் தகராறு நிகழ்ந்ததில், சின்னசாமியின் மாமியார் குறுக்கிட்டு அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, திடீரென சின்னசாமி தனது மாமியார் ஜெயக்கொடியை கல்லால் தாக்கினாராம்.
   இதில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
   இதுகுறித்து பென்னாகரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சின்னசாமியை கைது செய்தனர்.
   இந்த வழக்கு தொடர்பான விசாரணை, தருமபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
  இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாமியாரை கொன்ற குற்றத்துக்காக சின்னசாமிக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
  மேலும், அபராதம் கட்டத் தவறினால் கூடுதலாக 10 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, போலீஸார் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai